அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும் வகையில்,

" தென்னை  தொழிற்துறைக்கு ஒரு மறுமலர்ச்சி" எனும் தொனிப்பொருளின் கீழ் தும்புக் கயிற்றுத்  தொழிலில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்களுக்கு 12 மில்லியன்  பெறுமதியான மின்சார கயிறு திரிக்கும் 1000 இயந்திரங்களை வழங்கும் மூன்றாம் வேலைத் திட்டத்தின் கீழ் பலபிடிய பிரதேசத்தில் உள்ள  தொழிற்துறையினருக்கு கயிறு திரித்தல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு 2021.03.07 ஆந் திகதி பலபிய பிரதேச சபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

பெருந்தோட்ட அமைச்சின் தென்னைப் பயிர்ச் செய்கை சபை, தென்னை அபிவிருத்தி அதிகார சபை, கப்ருக் நிதியத்துடன் இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு,

இந்நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சர்  மொஹான் பி த சில்வா அவர்கள், முன்னார் மாகாண சபை உறுப்பினர் சன்ன சாலிய அவர்கள், பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளடங்கலாக அமைச்சர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.