q1  q2
 q3  q4
 q5  

இலங்கை பெஸ்டிவெல் (Sri Lanka Festival)-2023 க்கான விழா அண்மையில் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் திரு. ரொட்னி பெரேரா மற்றும் கமகயா நகர மேயர் திருமதி. ஷிவோதா ஹிரோமி ஆகியோர் தலைமையில் ஜப்பானில் உள்ள கமகயா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது. ஜப்பானியர்கள் மத்தியில் இலங்கையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கும், இலங்கையின் உற்பத்திகள் மற்றும் சேவைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஜப்பான் இலங்கை சங்கத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இலங்கையின் நடனம் மற்றும் இசையால் வர்ணமயமான இந்த விழாவை காண ஏராளமான ஜப்பானியர்களும் இலங்கையர்களும் திரண்டிருந்தனர். இதனால் அங்கு இலங்கையின் உணவு மற்றும் பானங்களை பெற்றுக்கொள்ளவும், இலங்கையின் ஏனைய உற்பத்திகளை கொள்வனவு செய்யவும் ஜப்பானியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதை காணமுடிந்தது. அங்கு மிக முக்கியமாக, இலங்கையின் செவ்விளநீருக்கு ஜப்பானியர்கள் மத்தியில் பெரும் கிராக்கி இருப்பது காணப்பட்டதோடு, இது இந்நாட்டின் செவ்விளநீர் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் முயற்சியாளர்களுக்கு மிகவும் நல்ல செய்தியாக அமைந்திருந்தது.


இந்நிகழ்வை வெற்றியடையச் செய்வதற்கு ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் வழிகாட்டுதல், ஜப்பானின் இலங்கை வர்த்தக சங்கம், வாகன ஏற்றுமதியாளர்களின் சங்கம், இலங்கை சமூகத்தினரின் பங்களிப்பு பெருமளவு கிடைக்கப்பெற்றதோடு, இந்நிகழ்வுக்கு ஜப்பான் இலங்கைச் சங்கத்தின் தலைவர் திரு. சமன் பிரிகயங்கர உட்பட இலங்கையர்கள் மற்றும் ஜப்பானியர்கள் பெருமளவான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.