வீட்டுக்குத் தேவையான தேங்காயை வீட்டுத் தோட்டத்திலே உற்பத்தி செய்தல், தேங்காய் தோட்டங்களின் விளைச்சலை வர்த்தகப் பொருளாதார நோக்கில் ஒவ்வொரு வீட்டுக்கும் உயர் தர கலப்பின தென்னை வகையைச் சேர்ந்த 2 தென்னங் கன்றுகளை வழங்கும் வகையில்,  'வீட்டுக்குரிய தேங்கயை வீட்டுத் தோட்டத்தில் பெறல்' என்ற வேலைதிட்டம் தற்போது நாடு பூராகவும் செயற்பட்டு வருகின்றது.


இந்த வேலைத்திட்டம் காலி மாவட்டத்தின் கிதுலம்பிடிய, கலேகான, மீபாவல மற்றும் லபுதூவ என்ற பிரதேசங்களில் இருந்து ஆரம்பித்து பெருந்தோட்ட அமைச்சர் கௌரவ ரமேஷ் பத்திரண அவர்களின் தலைமையின் கீழ் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்போது, ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு உயர் ரக கலப்பின தென்னங் கன்றுகள் வீதம் வழங்கப்பட்டதுடன், தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட 'கப்ருக'  கையேடும் வழங்கப்பட்டது. அந்த கையேடுகள் மூலம் மக்கள் தென்னை செய்கை பற்றியும், தென்னை நடுகையின் போது பின்பற்றப்பட வேண்டிய தொழில்நுட்ப முறைகள் பற்றியும், தென்னை செய்கையுடன் ஏற்படும்  நோய்கள் மற்றும் அவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை பெற்றுக் கொள்ள முடிந்தது.


கிதுலம்பிடிய கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு கிதுலம்பிடிய ஆனந்த பிரிவெனாவில் நடைபெற்ற தென்னங் கன்றுகள் வழங்கும் இந்த வேலைத் திட்டத்துடன்  தொடர்புடையதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் (CRI ) உத்தியோகத்தர்களினால் தென்னங் கன்றுகளை நடும் விதம் குறித்து மக்களுக்கு விழிப்பூட்டும் பயிற்சி நிகழ்ச்சியையும் நடாத்தினார்கள்.