நாட்டில் தென்னைச் செய்கையை மேம்படுத்தும் நோக்குடன், தரிசாக கைவிடப்பட்டுள்ள வயல்களை மீண்டும் செயற்படுத்தும் வகையில்  ஜோசன் முறையில் தென்னை மற்றும் செவ்விளநீர் கன்றுச் செய்கைத் திட்டத்திற்குப்  பொருத்தமான  பலப்பிட்டி, கொஸ்கொட, கரிஜ்ஜப்பிட்டிய, வெல்லன்கொடை அணைக்கட்டுப் பிரதேசங்களில் நெற்செய்கையின்றி காணப்படும்  தரிசு வயல்களில் பயிரிடுவதற்கு 28.03.2022 ஆந் திகதி  கெளரவ பெருந்தோட்ட அமைச்சரின் தலைமையின் கீழ் நடைபெற்றது. 

கடந்த வருடம் மாத்திரம், தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி மூலம் நாடு 836 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியாக ஈட்டியது, அடுத்த ஐந்து வருடங்களில் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுவது முக்கிய நோக்கமாகவும் அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் கௌரவ பெருந்தோட்ட அமைச்சருடன் அமைச்சின் செயலாளர் திரு. ரவீந்திர ஹேவாவிதாரண, இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. திஸ்ஸ ஹேவாவிதான, பிரதேச அரசியல் அதிகாரங்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.