இலங்கையில் தேயிலை மற்றும் தென்னை பயிர்ச்செய்கை நிலங்களில் நெதர்லாந்து அரசாங்கத்தின் அனுசரணையுடன் அமுல்படுத்தப்படும் மாதிரி விவசாய வனவியல் முன்னோடித் திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி 18.03.2022 அன்று பத்தரமுல்லையில் உள்ள Water Edge ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த மாதிரி விவசாய வனவியல் முன்னோடித் திட்டத்திற்கு நெதர்லாந்து அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு, தென்னை ஆராய்ச்சி நிறுவனம், தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் நெதர்லாந்தில் உள்ள வேகோநிகன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்கு இலங்கையில் உள்ள நெதர்லாந்தின் தூதுவர் (பிரதி) Her Excellency M.S. Anouk Baron ,  நெதர்லாந்து அரசாங்கத்தின் விவசாய ஆலோசகர்  Mr.Michelin van Erkel, கருத்திட்ட முகாமையாளர் Mrs. Maaike Snel, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் திரு.ரவீந்திர ஹேவாவிதாரண அவர்கள் , தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும மற்றும் குருநாகல் மற்றும் மஸ்கெலியா பெருந்தோட்டக் நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.