அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும் வகையில்  
இலங்கையின் சீனித்  தேவைப்பாட்டினை தன்னிறைவு செய்யும் வகையில் பெல்வத்த சீனி நிறுவனத்தின் புதிய நிர்வாக அதிகார சபையினால் எதிர்பார்க்கப்பட்ட கரும்பு அறுவடையை அதிகரிக்கும்  நோக்குடன் இருபது வருடங்களுக்குப் பின்னர் ஒக்கம்பிடிய, மாளிகாவில, இலுக்பிடிய, ஹேபெஸ்ஸ மற்றும்  கோமதியவெல போன்ற பிரதேசங்களில் 10000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நில அளவில் கரும்பு நடும் நடவடிக்கை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆந் திகதி  கோமதியவல பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வுக்கு கெளரவ பெருந்தோட்ட அமைச்சருடன் சிறு தோட்ட பயிர்கள் மற்றும் ஏற்றுமதி விவசாய ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்  கெளரவ ஜானக வக்குபுர அவர்கள், விவசாய மற்றும் அசேதன உர உற்பத்தி இராஜாங்க அமைச்சர் கெளரவ ஷசிந்திர ராஜபக்ஷ அவர்கள் உள்ளடங்கலாக மேலும் பல இராஜாங்க அமைச்சர்கள், பிரதேச அரசியல் அதிகாரிகள் மற்றும் லங்கா சீனி நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.